வணிகம்

பார்மா துறையில் ரூ.4,000 கோடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி

பிடிஐ

மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் உற்பத்தி துறையில் ரூ.4,000 கோடி அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்நிய முதலீடு அனுமதிக்க வேண்டி டோரண்ட் பார்மா, பயோகான் ரிசர்ச் சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தன. நேற்று இந்த விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்ரிடெஸ் அர்கோலேப் நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சாசன் நிறுவனத்தோடு இணைக்கப்பட்ட விவகாரம் காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று நிறுவனங்களுக்கான அனுமதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த டோரண்ட் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் தனது அந்நிய முதலீட்டு அளவை 13.09 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்திக் கொள்ள கோரியிருந்தது. இதன் மதிப்பு ரூ.3,000 கோடியாகும். மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியதில் அதிக மதிப்பு கொண்ட விண்ணப்பம் இதுவாகும். அந்நிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் இதற்கான பரிந்துரையை செய்திருந்தது. மே.28ல் இதற்கான கூட்டத்தை அந்நிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் கூட்டியிருந்தது.

சைன்ஜென் இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.930 கோடிக்கு அந்நிய முதலீட்டை உயர்த்திக் கொள்ள அனுமதி கேட்டிருந்தது. இந்த நிறுவனம் அந்நிய முதலீட்டு அளவை 10 சதவீதத்திலிருந்து 44 சதவீதமாக உயர்த்த உள்ளது.

டோரண்ட் பார்மா நிறுவனத்துக்கு அடுத்து பார்மா துறையில் அதிக பட்ச முதலீட்டுக்கு இந்த நிறுவனத் துக்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இந்த நிறுவனம் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக் கான பொது பங்கு வெளியீட்டுக்கு திட்டமிட்டு வருகிறது.

இதற்கடுத்து ஸ்டெரிகாட் கட் ஸ்ட்ரிங்ஸ் நிறுவனம் ரூ.43.52 கோடி திரட்டவும், ஓர்டின் ஹெல்த்கேர் நிறுவனம் 23.34 கோடி திரட்டவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓர்டின் நிறுவனம் அல்கெம் லேபோரட்டரீஸ் குழும நிறுவன சொத்து களை வாங்க திட்டமிட்டுள்ளது.

ஸ்ரிடெஸ் அர்கோலேப் நிறுவனத்துக்கான அனுமதியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த நிறுவனம் சாசன் பார்ம நிறுவனத்தோடு இணைக்கப்பட்ட விவகாரத்தால் இதற்கான அனுமதி அளிக்கப்படவில்லை.

செலான் லேபோரட்டரீஸ், சாந்தா பயோடெக்னிக்ஸ் மற்றும் ஸ்பார்ஷா பார்மா போன்ற நிறுவன விண்ணப்பங்களுக்கான அனுமதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டோரண்ட் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் தனது அந்நிய முதலீட்டு அளவை 13.09 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்திக் கொள்ள கோரியிருந்தது.

SCROLL FOR NEXT