பேஷன் நிறுவனமான கார்யாவின் (Kaaryah) பங்குகளை ரத்தன் டாடா வாங்கியுள்ளார். பெண்களுக்கான பேஷன் ஆடைகளை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் பங்குகளை ரத்தன் டாடா வாங்கியுள்ளார். இதற்கான பங்கு விற்பனை நடவடிக்கைகளை முடிந் துள்ளன. ரத்தன் டாடா தனது தனிப்பட்ட முதலீடாக இதை மேற்கொண்டுள்ளார். இருந்தாலும் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது, எவ்வளவு பங்குகள் வாங்கப்பட்டது என்பது வெளியிடப் படவில்லை.
எங்களது பங்குகளை வாங்கியதன் மூலம் ரத்தன் டாடா எங்களை பெருமைப்படுத்தியுள்ளார் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் சர்வதேச தரத்திலான பிராண்டுகளை உருவாக்க இலக்கு வைத்துள்ளோம் என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் கார்யா நிறுவனத்தின் நிறுவனரான நிதி அகர்வால்.
டாடா குழும பொறுப்புகளிலிருந்து ரத்தன் டாடா விலகிய பிறகு பல்வேறு நிறுவனங்களுக்கும் வென்ச்சர் முதலீடுகளை செய்து வருகிறார். குறிப்பாக இ-காமர்ஸ் நிறுவனங்களில் டாடா முதலீடு செய்து வருகிறார். ஸ்நாப்டீல், அர்பன் லாடர், புளூஸ்டோன், கார்டேகோ டாட் காம் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள் ளார். மேலும் எம்-காமர்ஸ் நிறுவன மான பேடிஎம் நிறுவனத்திலும், காற்றாலை நிறுவனமான அல் டாரஸ் எனர்ஜீஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார். கார்யா நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் குறிப்பிடத்தக்க சந்தையை வைத்துள்ளது.
மாதத்துக்கு 150 புதிய டிசைன்களை அறிமுகப்படுத்துகிறது. பெண்களுக்கான தனிச் சிறப்பான ஆடை வகைகளில் இந்திய மற்றும் சர்வதேச பிராண்டு களை வழங்குகிறது என்று கார்யா நிறுவனர் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.