வணிகம்

பிளாஸ்டிக் கரன்ஸி உபயோகம்: அருண் ஜேட்லி வலியுறுத்தல்

ஐஏஎன்எஸ்

பிளாஸ்டிக் கரன்ஸி பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று குறிப்பிட்டார். சமீபத்தில்தான் மத்திய பிரதேச மாநிலத்தில் விரிவுபடுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கான காகித ஆலையை அருண் ஜேட்லி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னேறிய நாடுகள் எல்லாம் மெல்ல மெல்ல பிளாஸ்டிக் கரன்ஸி மற்றும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறைகளுக்கு மாறி வருகின்றன. இது இந்தியாவுக்கும் தேவை என நினைக்கிறேன் என குறிப்பிட்டார். நாமும் மெல்ல மெல்ல பிளாஸ்டிக் கரன்ஸி நடைமுறையை நோக்கி வளர்வதற்கு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். என்று உள்நாட்டில் பணம் தயாரிப்பதற்கான கருத்தரங்கில் குறிப்பிட்டார்.

பிளாஸ்டிக் பணத்தை பயன்படுத்துவதை பரவலாக்க வேண்டும். மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ரூபே டெபிட் கார்டை அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எலெக்ட்ரானிக் பரிமாற்றத்துக்கு ஏற்றுக்கொள்கின்றன. இது மாஸ்டர் கார்டு, விசா மற்றும் அமெக்ஸ் கார்டுகளுக்கு போட்டியாக திகழ்கிறது. அதே நேரத்தில் ரூபாய் நோட்டுகளை இந்தியாவில் தயாரிப்பதை ஊக்கப்படுத்துவதிலிருந்தும் பின்வாங்கவில்லை.

கடந்த வாரம் ரூபாய் நோட்டுக்கான பேப்பர் ஆலையை ஹவுசா காபத்தில் அருண் ஜேட்லி திறந்து வைத்தார்.இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் காகிதம் மற்றும் இங்க் கொண்டு நமது கரன்ஸியை தயாரிக்கும் காலம் வந்துள்ளது. இதுபோல அனைத்து உற்பத்தித் துறைகளிலும் மாற்றம் நிகழும் என்று மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT