வணிகம்

2025-ல் 45.5 லட்சம் கார்கள் விற்பனை: 18.44 லட்சத்துடன் மாருதி சுசூகி முதலிடம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் கடந்த 2025-ம் ஆண்​டில் ஒட்டுமொத்த கார்​களின் விற்​பனை புதிய உச்​ச​மாக 45.5 லட்சத்தை எட்​டி​யுள்​ளது.

இதுகுறித்து தொழில் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கடந்த 2025-ம் ஆண்டு தொடக்​கம் இந்​திய மோட்​டார் வாக​னத் துறைக்கு மந்​த​மாகவே இருந்​தது. ஆனால், சரக்கு மற்​றும் சேவை வரிக் (ஜிஎஸ்டி 2.0) குறைப்பு காரண​மாக ஆண்​டின் பிற்​பகு​தி​யில் கார் விற்​பனை கணிச​மாக அதி​கரித்​தது. சாதனை அளவாக கடந்த 2025-ம் ஆண்​டில் பயணி​கள் வாகன விற்​பனை 45.5 லட்​சத்தை எட்டி​யுள்​ளது.

கடந்த 2024-ம் ஆண்டு விற்​பனை​யான 43.05 வாக​னங்​களு​டன் ஒப்பிடு​கை​யில் இது, சுமார் 6 சதவீத வளர்ச்​சி​யாகும்.

கடந்தாண்டு சாதனை விற்​பனைக்கு, மாருதி சுசூகி இந்​தி​யா, மஹிந்​திரா அண்ட் மஹிந்​தி​ரா, டாடா மோட்​டார்​ஸ், டொயோட்டா, ஸ்கோடா போன்ற நிறு​வனங்​களின் விற்​பனை கணிச​மான அளவில் அதிகரித்​ததே முக்​கிய காரணம்.

கடந்த 2025-ம் ஆண்​டில் மாருதி சுசூகி நிறு​வனம் 18.44 லட்​சம் வாக​னங்​களை​யும், டாடா மோட்​டார்ஸ் 5.87 லட்​சம் வாகனங்களை​யும், டொயோட்டா 3.88 லட்​சம் வாக​னங்​களை​யும், ஸ்கோடா 72,665 வாக​னங்​களை​யும் விற்​பனை செய்​துள்​ளன.

மாருதி சுசூகி நிறு​வனத்​துக்கு அடுத்​த​படி​யாக நீண்​ட​கால​மாக வாகன விற்​பனை​யில் ஹூண்​டாய் மோட்​டார் 2-வது இடத்​தில் இருந்து வந்​தது. இந்​நிலை​யில், 2025-ல் மஹிந்​திரா அண்ட் மஹிந்​திரா ஹூண்​டாயை பின்​னுக்​குத் தள்ளி

2-வது இடத்தை பிடித்​துள்​ளது. டாடா மோட்​டார்ஸ் 3-வது இடத்​தில் உள்​ளது. தென்​கொரிய நிறு​வன​மான ஹுண்​டாய் 4-வது இடத்தை பிடித்​துள்​ளது.

டிசம்​பரில் 22% உயர்வு: கார் விற்​பனை​யில் முதலிடத்​தில் உள்ள மாருதி சுசூகி நிறு​வனத்​தின் கார் விற்​பனை கடந்த டிசம்​பர் மாதத்​தில் 22% அதி​கரித்​துள்​ளது. இதுகுறித்து அந்த நிறு​வனம் கூறி​யுள்​ள​தாவது: கடந்த டிசம்​பரில் 2,17,854 கார்​கள் விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ளன. இது, 2024-ம் ஆண்​டின் இதே மாதத்​தில் விற்​பனை​யான 1,78,248 கார்​களு​டன் ஒப்​பிடு​கை​யில் 22 சதவீதம் அதி​கம் ஆகும். வர்த்தக வாக​னம் மற்​றும் டொயோட்டா கிர்​லோஸ்​கருக்கு சப்ளை செய்​தவை உட்பட உள்​நாட்டு மொத்த வாகன விற்​பனை 1,40,829-லிருந்து 1,92,117-ஆக உயர்ந்​துள்​ளது.

ஆல்​டோ. எஸ்​-பிரஸ்​ஸோ உள்​ளிட்ட மினி கார் விற்​பனை 7,418-லிருந்து 14,225-ஆக அதி​கரித்​துள்​ளது. பலேனோ, செலிரியோ. டிசையர், இக்​னிஸ், ஸ்விப்ட் உள்​ளிட்ட காம்​பாக்ட் கார் விற்​பனை 54,906-லிருந்து 78,704-ஆக உயர்ந்​துள்​ளது. பிரெஸ்​ஸா, எர்​டி​கா, கிராண்ட் விடா​ரா, இன்விக்​டோ, ஜிம்​னி, விக்​டோரிஸ் எக்​ஸ்​எல் 6 உள்​ளிட்ட யுடிலிட்டி வாகன விற்​பனை 55,561-லிருந்து 73,818-ஆக அதி​கரித்​துள்​ளது. இருப்​பினும் கடந்த டிசம்​பரில்​ ஏற்​றுமதி 37,419-லிருந்​து 25,739-ஆக குறைந்​துள்​ளது. இவ்​​வாறு ​மாரு​தி நிறுவனம்​ தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT