‘ஒண்ணே ஒண்ணுதான் பிடித்தக் கார்’ என்று விரல்விட முடியாது. அவ்வப்போது அழகான தோற்றத்தோடு சந்தைக்கு வரும் புதிய கார்கள் அதிகம் பிடிக்கும். அந்த வரிசையில் இப்போதைக்கு என் மனதுக்குப் பிடித்திருக்கும் கார்கள் சிவப்பு நிற வால்வோ வி 40 மற்றும் பீட்டில்.
முதல் நாள் கல்லூரிக்குப் போவது, முதல் மழையில் நனைவது இப்படித்தான் இந்த இந்த இரண்டு கார்களுடைய தோற்றத்தைப் பார்த்ததுமே அதில் பயணம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உண்டாகும்.
வால்வோ வி 40 காரை ஓட்டிச்செல்லும்போது கிடைக்கும் அனுபவம் இதுவரை நான் எந்த கார்களிலும் அனுபவித்ததில்லை. பீட்டில் காரின் தோற்றம் ரேஸ் காரைப் போல என்னை வசீகரிக்கிறது. மற்றபடி அந்தக் காரை இதுவரைக்கும் ஓட்டிப் பார்த்தில்லை.
விரைவில் அந்தக் கனவை நிறைவேற்றிக்கொள்வதோடு, வாங்கி வந்து வீட்டு போர்டிகோவில் நிறுத்த வேண்டும் என்பதுதான் லட்சியம்.