பொதுத்துறை நிறுவனமான நால்கோ, குஜராத் அல்கலீஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் (ஜிஏசிஎல்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து ஒருங்கிணைந்த காஸ்டிக் சோடா ஆலையை குஜராத் மாநிலத்தில் அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
மின்னுற்பத்தி ஆலை மற்றும் காஸ்டிக் சோடா ஆலையை குஜராத் மாநிலம் தாகேஜில் அமைக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. இதற்கான திட்ட செலவு ரூ. 1,789 கோடியாகும்.
இந்த கூட்டு திட்டத்தில் நால்கோ 40 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும். எஞ்சிய 60 சதவீத பங்குகள் ஜிஏசிஎல் வசமிருக்கும்.
பின்தங்கிய பகுதிகளில் ஆலை அமைக்கும் திட்டத்தின் அடிப் படையில் இது மேற்கொள்ளப் படுவதாக நால்கோ நிறுவன நிர்வாக இயக்குநர் என்.ஆர். மொகந்தி மற்றும் ஜிஏசிஎல் நிர்வாக இயக்குநர் ஏ.எம். திவாரி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆலை ஆண்டுக்கு 2.7 லட்சம் டன் காஸ்டிக் சோடாவை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தாக இருக்கும். இந்த ஆலையில் 100 மெகாவாட் மின்னுற்பத்தி ஆலையும் அமைக்கப்பட உள்ளது.