வணிகம்

கிங்பிஷரிடமிருந்து கடனை வசூலிக்க முடியவில்லை: யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா கவலை

செய்திப்பிரிவு

கிங்பிஷர் நிறுவனத்திடமிருந்து கடன் தொகையை வசூலிக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்று யுனை டெட் பேங்க் ஆப் இந்தி யாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பி.ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

கிங்பிஷர் நிறுவனத்துக்கு 17 வங்கிகள் கொண்ட குழு கடன் கொடுத்திருந்தாலும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா முதலில் இதுபோன்ற கருத்தினை தெரி வித்திருக்கிறது.

அதேபோல கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருந்தும் திருப்பி செலுத்தாதவர் பட்டியலில் கிங்பிஷர் நிறுவனத்தை முதலில் சேர்த்ததும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாதான்.

17 வங்கிகள் கிங்பிஷர் நிறுவ னத்துக்கு சுமார் ரூ.7,500 கோடி கடன் கொடுத்திருக்கின்றன. இதுவரை ரூ.1,000 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது. (வட்டியில்லாமல், அசல் தொகையில்)

கிங்பிஷர் கணக்கில் தற்போது எந்தவிதமான பரிவர்த்தனையும் நடக்கவில்லை. இதுவரை எங்களுக்கு எந்த தொகையும் கிடைக்கவில்லை.

கிங்பிஷர் நிறுவனத்தின் கட்டடங்கள் மற்றும் அடமான சொத்துகளை விற்கும்போது சில கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் ஒட்டு மொத்த கடன் தொகையுடன் ஒப்பிடும் போது, சொத்துகளின் மூலம் கிடைக்கும் தொகை வட்டிக்கு மட்டுமே சமமாக இருக்கும் என்று பி.னிவாஸ் தெரிவித்தார்.

கடந்த இரு வருடங்களாக எங்களுக்கு வட்டி கிடைக்க வில்லை. அதனால் வட்டி மட்டுமே கிடைக்குமே தவிர அசல் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.

யுனைடெட் பேங்க் இந்தியா கிங்பிஷர் நிறுவனத்துக்கு கொடுத்த கடன் ரூ.400 கோடியாகும். அக்டோபர் 2012 முதல் கிங்பிஷர் நிறுவனம் செயல்பாட்டில் இல்லை. அதிகபட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 1,600 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது.

கிங்பிஷர் நிறுவனம் செயல் பாட்டில் இருந்த போதே, கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடனை மறுசீரமைப்பு செய்தது.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா செய்ததை போலவே, எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகியவை கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருந்தும் திருப்பி செலுத்தாத நிறுவனங் களின் பட்டியலில் கிங்பிஷரை சேர்த்தன. ஆனால் பல நீதிமன் றங்களில் கிங்பிஷர் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

அக்டோபர் 2012 நிலவரப்படி கிங்பிஷர் நிறுவனம் ரூ.16,023 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமடைந்திருக்கிறது.

2005-ம் ஆண்டு மே மாதம் கிங்பிஷர் செயல்படத் தொடங் கியது. நிறுவனம் மூடப்படும் வரை லாபம் சம்பாதித்ததே இல்லை.

SCROLL FOR NEXT