வணிகம்

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் கவனம் செலுத்தும் என்ஆர்ஐகள்

செய்திப்பிரிவு

வீடுகளின் நிலையான விலை, சாதகமான ரூபாய் மாற்று விகிதம் காரணமாக இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) கவனம் செலுத்துவதாக ஹெச்டிஎப்சி தெரிவித்திருக்கிறது.

இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் உள்நாட்டில் மந்த நிலை நிலவும்போது வெளிநாட்டு இந்தியர்கள் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள் என்று ஹெச்டிஎப்சி தெரிவித் திருக்கிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கண்காட்சியை அமைத்து வருகிறது ஹெச்டிஎப்சி. வரும் மே 30-31 ஆகிய நாட்களில் இதேபோன்ற கண்காட்சியை லண்டனில் நடத்த இருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட திட்டங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட இருக் கின்றன.

இந்த நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது, வட்டி விகிதம் குறைந்து வருவது ஆகியவை என்.ஆர்.ஐ.கள் வீடு வாங்குவதற்கு உதவியாக இருக்கும் என்று ஹெச்டி எப்சியின் நிர்வாக இயக்குநர் ரேணு சூட் கர்நாட் தெரிவித் தார்.

இந்திய வீட்டுச்சந்தையில் என்.ஆர்.ஐ.கள் பங்கு முக்கியமானது. இந்தியாவில் விற்பனையாகும் வீடுகளில் 8 முதல் 10 சதவீதம் அவர்களின் பங்கு இருக்கிறது. நகரத்துக்கு நகரம் இந்த விகிதம் மாறுபடுகிறது. கேரளாவில் விற்பனையாகும் வீடுகளில் 30-35 சதவீதம் வரை என்.ஆர்.ஐ.களின் பங்கு இருக்கிறது.

ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் விற்பனையாகும் வீடுகளில் 10 முதல் 12 சதவீதம் வரை என்.ஆர்.ஐ.கள் பங்கு உள்ளது.

தொடர்ந்து எட்டாவது ஆண்டாக ஹெச்டிஎப்சி வெளி நாடுகளில் இந்த கண்காட்சியை நடத்துகிறது.

SCROLL FOR NEXT