இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றத்தைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 401 புள்ளிகள் ஏற்றம் கண்டு 27507 புள்ளிகளிள் வர்த்தகம் முடிந்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 133 புள்ளிகள் ஏற்றத்தை கண்டு 8325 புள்ளிகளிள் முடிந்துள்ளது.
உலோகம், வங்கி, ஆட்டோ மொபைல் மற்றும் பார்மா துறை பங்குகள் நேற்றைய வர்த்தகத் தில் ஏற்றத்தைக் கண்டன. பேங்க் நிப்டி 2 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. பேங்க் ஆப் பரோடா பங்குகள் நேற்று 16 சதவீதம் வரை ஏற்றத்தைச் சந்தித்தது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கையாக அந்த நாட்டு மத்திய வங்கியான பீப்பிள்ஸ் பேங்க் ஆப் சைனா வட்டி குறைப்பு செய்துள்ளது. வட்டி விகிதத்திலிருந்து 25 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.
இதன் காரணமாக உலோகத்துறை ஏற்றம் கண்டுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடுகளில் எப்எம்சிஜி துறை தவிர அனைத்து குறியீடுகளும் ஏற்றமாகவே இருந்தது.