மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மென்பொருள் துறைக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக உள்ளது. அடுத்த 5 முதல் 10 வருடங்களில் சுமார் 4,000 கோடி டாலர் மதிப்பிலான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று இந்திய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் கூறியுள்ளது.
மத்திய அரசு 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. கடந்த மாதத்தில் மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தது. ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்துக்கு மத்திய அரசின் உதவியாக, ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டிக்கும் ஆண்டுக்கு ரூ.100 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுக்கு ரூ. 48,000 கோடி ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அறி வித்த முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்று. இதன் மூலம் இந்தியாவில் நகர அமைப்புகளையே மாற்றி யமைக்க முடியும் என மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நகரங்களை உருவாக்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சி யையும் உள்ளடக்கியது.
இந்த ஸ்மார்ட் சிட்டி உருவாக் கத்தின் மூலம் மென்பொருள் துறைக்கு அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு 3,000 கோடி டாலர் முதல் 4,000 கோடி டாலர் மதிப்பிலான தொழில் வாய்ப்புகள் உருவாகும். ஸ்மார்ட் சிட்டியில் 10 முதல் 15 சதவீதம் தகவல் தொடர்பு தொழில் நுட்ப துறையின் தேவை இருக்கும் என்று நாஸ்காம் தலைவர் ஆர். சந்திரசேகர் குறிப்பிட்டார்.
ஸ்மார்ட்சிட்டி திட்டம் குறித்து மே 21-ல் டெல்லியில் நடைபெற உள்ள ஸ்மார்ட் சிட்டி கண்காட்சிக் காக நாஸ்காம் அறிக்கை தயாரித்துள்ளது. மேலும் இது குறித்து தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு வழிகாட்டவும் விவாதிக்கவும் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு நாஸ்காம் அழைப்பு விடுத் துள்ளது.
ஸ்மார்ட் சிட்டியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து நாஸ்காம் ஒரு திட்டம் வகுத்துள்ளது. இந்த துறையில் எழும் சிக்கல்களை தீர்ப்பதற்கு இலகுவான மற்றும் வெளிப்படையான செயல்பாடு களுக்கான திட்டம் இது.
இதன் நோக்கம் ஸ்மார்ட் சிட்டியின் மாஸ்டர் பிளானில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதாக இருக்கும். அதாவது மாநில அரசாங்கம் மற்றும் நகர்புற உள்ளூர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்ளும்.
மேலும் இந்த பணிகளில் ஈடுபடும் தொழில் நிறுவனங் களுக்கு அரசாங்கத்திடமிருந்து வாய்ப்புகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொள்ளும். ஸ்மார்ட் சிட்டியின் மொத்த திட்ட மதிப்பில் தகவல் தொடர்பு தொழில் நுட்ப முதலீடு 10 முதல் 15 சதவீதமாக இருக்கும் என்று கூறினார் சந்திரசேகர்.
தகவல் தொடர்பு தொழில்நுட்பம் குறித்து நாஸ்காம் உருவாக்கியுள்ள ஆலோசனை திட்டத்தில் இந்திய நகரங்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. மேலும் உள்கட்டமைப்பு, சமூக உட்கட்டமைப்பு சுற்றுச்சூழல் உட் கட்டமைப்பு, நிர்வாக உட்கட் டமைப்பு போன்றவை குறித்து பேசப்பட்டுள்ளது.