நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் டெல்லியைச் சேர்ந்த ரதி ஸ்டீல் நிறுவனம் மற்றும் அதன் முக்கிய உயர் அதிகாரிகள் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டது.
நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நர் பிரதீப் ரதி, தலைமைச் செயல் அதிகாரி உதித் ரதி மற்றும் துணைப் பொது மேலாளர் குஷால் அகர்வால் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ரதி ஸ்டீல் மற்றும் மின்னுற்பத்தி நிறுவனம் மற்றும் அதன் 3 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 120 பி மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப் பத்திரிகையை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பிரஷார், ஜூன் 2-ம் தேதி இது தொடர்பான ஆவணங் களை தாக்கல் செய்வதாகக் கூறிய தற்கு அனுமதி அளிக்கவில்லை.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கேஸ்லா வடக்கு நிலக்கரி சுரங் கத்தை ஆர்எஸ்பிஎல் நிறுவனத் துக்கு ஒதுக்கியதில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்படி குற்ற சதி (120-பி) மற்றும் மோசடி (420) ஆகிய பிரிவு களின்கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆர்எஸ் பிஎல் நிறுவனத்துக்கு சுரங் கம் ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங் களை தாக்கல் செய்வதில் சிபிஐ தோல்வியடைந்துவிட்டது என்று குற்றம் சாட்டினர். மேலும் இந்த குறிப்பிட்ட கேஸ்லா நிலக்கரி சுரங்கத்திலிருந்து சிறிதளவு நிலக் கரியைக் கூட நிறுவனம் வெட்டி யெடுக்கவில்லை. எனவே இதில் தவறாக ஆதாயமடைந்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது என்றும் இதில் எவருக்கும் எத்தகைய இழப்பும் ஏற்படவில்லை எனவும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டினர்.
ஆர்எஸ்பிஎல் நிறுவனமும் அதன் அதிகாரிகளும் 36-வது ஆய் வுக்குழு முன்பாக தவறான தகவல் களை அளித்து 250 ஏக்கர் பரப்பள வுள்ள நிலக்கரி சுரங்க நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டதாக சிபிஐ தரப்பில் வாதம் செய்யப் பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 அதிகாரிகள் குறித்த நாளில் நீதிமன்றத்தில் ஆஜரானதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்பிஎல் நிறுவனத்துக்கு சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் உள்ள கேஸ்லா வடக்கு நிலக்கரி சுரங்கம் 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஒதுக்கப்பட்டது.