வணிகம்

சீனாவில் முதல் கிளையை தொடங்கியது ஐசிஐசிஐ வங்கி

பிடிஐ

சீனாவில் தன்னுடைய முதல் கிளையை ஐசிஐசிஐ வங்கி தொடங்கியது. சீன பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கிளையைத் தொடங்கி வைத்தார். சர்வதேச நிதி நகரமான ஷாங்காயில் இந்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கிளையில் 17 அதிகாரிகள் இருப்பார்கள். கார்ப்பரேட், கருவூலம் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்தக் கிளையில் கையாளப்படும். இந்த நிகழ்ச்சியில் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சாந்தா கொச்சார், இந்தியா மற்றும் சீனாவின் உயரதிகாரிகள் உடன் இருந்தனர். இந்தியா மற்றும் சீனா இடையே நடக்கும் வர்த்தககம் வளர்வதற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று சாந்தா கொச்சார் தெரிவித்தார்.

எஸ்.பி.ஐ., கனரா வங்கி, அலாகாபாத் வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகள் ஏற்கெனவே சீனாவில் செயல்பட்டு வருகின்றன.

சீனாவில் இன்போசிஸ் முதல் வளாகம்

இன்போசிஸ் நிறுவனம் தன்னுடைய முதல் வெளிநாட்டு மேம்பாட்டு வளாகத்தை சீனாவில் தொடங்கியது. 12 கோடி டாலர் முதலீட்டில் இந்த வளாகம் அமைய இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஷாங்காய் நகரில் கையெழுத்தானது.

இந்த சர்வதேச மேம்பாட்டு மையத்தில் 4,500 நபர்கள் வரை பணியாற்ற முடியும் என்று இன்போசிஸ் சீனா நிறுவனத்தின் தலைவர் ரங்கராஜன் வெல்லாமூர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்படும் முதல் மையம் இது. இந்த மையம் அடுத்த ஆண்டு செயல்படும் என்றார்.

SCROLL FOR NEXT