வணிகம்

இந்தியாவின் தேயிலை உற்பத்தி 8% அதிகரிப்பு

செய்திப்பிரிவு

இந்தியாவின் தேயிலை உற்பத்தி 2013-14-ம் நிதி ஆண்டில் 8 சதவீதம் அதிகரித்து 122.44 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேயிலை விளைச்சல் அதிகரித்ததே உற்பத்தி உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

2012-13-ம் நிதி ஆண்டில் தேயிலை உற்பத்தி 113.50 கோடி கிலோவாக இருந்தது என்று தேயிலை வாரியம் வெளியிட்ட குறிப்பு தெரிவிக்கிறது.

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் மட்டும் தேயிலை உற்பத்தி 6.52 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்விரு மாநிலங்களில் உற்பத்தியான தேயிலை அளவு 98 கோடி கிலோவாகும். முந்தைய ஆண்டு இவ்விரு மாநிலங்களின் உற்பத்தி 92 கோடி கிலோவாக இருந்தது.

இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பங்களிப்பு 80 சதவீத அளவுக்கு உள்ளது.

SCROLL FOR NEXT