ஆதித்ய பிர்லா குழுமம் தன்னு டைய குழுமத்தில் இருக்கும் அனைத்து ஜவுளி நிறுவனங் களையும் ஒரே நிறுவனத்தின் கீழ் இணைத்திருக்கிறது.
ஆதித்ய பிர்லா பேஷன் ரீடெய்ல் என்று புதிய நிறுவனத்தின் கீழ் குழுமத்தில் இருக்கும் அனைத்து ஜவுளி மற்றும் ரீடெய்ல் பிராண்ட் கள் செயல்படும்.
தற்போது உருவாக்கப்பட் டிருக்கும் புதிய நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 5,290 கோடி ரூபாயாகும். இந்த புதிய நிறுவனத்தின் கீழ் 1,869 கடைகள் உள்ளன. இதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய பேஷன் நிறுவனமாக ஆதித்ய பிர்லா பேஷன் ரீடெய்ல் நிறுவனம் உருமாறி இருக்கிறது.
ஆதித்ய பிர்லா நூவோ நிறுவனத்தில் இருக்கும் மதுரா பேஷன் அண்ட் ரீடெய்ல் நிறுவனம் தனியாக பிரிக்கப்பட்டு பாண்டலூன் நிறுவனத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயத்தில் பாண்டலூன் நிறுவனம் ஆதித்ய பிர்லா பேஷன் அண்ட் ரீடெய்ல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
வேன் ஹூசேன், ஆலன் சோலி, லூயி பிலிப் உள்ளிட்ட பல முன்னணி பிராண்ட்கள் ஆதித்ய பிர்லா நூவோ நிறுவ னத்தின் கீழ் வருகின்றன.
ஆதித்ய பிர்லா நூவோ நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு மதுரா பேஷன் கணிசமான பங்கினை கொடுத்துவந்தது. அதே சமயத்தில் பாண்டலூன் ரீடெய்ல் நிறுவனம் நஷ்டத்தில் செயல்படும் நிறுவனமாகும்.
ஜவுளி பிஸினஸை ஆதித்ய பிர்லா நூவோ நிறுவனத்தில் இருந்து பிரிப்பது அதன் பங்குதாரர்களுக்கு நல்லது, அதே சமயத்தில் இந்த இணைப்பு பேஷன் துறையில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள உதவியாக இருக்கும் என்று குழுமத்தின் தலைவர் குமார மங்கலம் பிர்லா தெரிவித் திருக்கிறார்.
ஆதித்ய பிர்லா நூவோ நிறுவனத்தின் ஐந்து பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு புதிய நிறுவனத்தின் 26 பங்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட் டிருக்கிறது.
இந்த மாற்றங்கள் இன்னும் ஆறு முதல் 9 மாதங்களுக்குள் முடிவடையும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பாண்டலூன் நிறுவனம் கிஷோர் பியானியால் ஆரம்பிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிறுவனத்தை பிர்லா குழுமம் வாங்கியது.பிராண்ட் துணி வியாபாரத்தில் ஆண்டுக்கு 18 சதவீத அளவுக்கு வளர்ச்சி இருக்கிறது.