வணிகம்

ரூ. 2.89 லட்சம் விலையில் ஜென் எக்ஸ் நானோ: மக்களின் காராக அறிமுகம்

பிடிஐ

முன்னணி வாகன உற்பத்தி நிறுவ னமான டாடா மோட்டார்ஸ் நேற்று புதிய மாடல் நானோ காரை அறிமுகப்படுத்தியது. அடுத்த தலைமுறையின் இந்த புதிய மாடல் நானோ காரின் விலை ரூ.2.89 லட்சமாகும் இதில் மேம் படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் கொண்டுள்ளது.

இந்த காரின் விற்பனை நாடு முழுவதும் உள்ள 450 டாடா மோட்டார்ஸ் விற்பனையகங்களில் நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் அடுத்து இரண்டு மாடல்களை வெளியிட உள்ளது. தானியங்கி மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட எக்ஸ் எம்ஏ மற்றும் எக்ஸ்டிஏ என இரண்டு மாடல்களை கொண்டுவர உள்ளது.

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன தொழில் பிரிவின் தலைவர் மயன்க் பரீக் கூறும்போது உலக மோட்டார் சந்தைக்கு இந்தியா வழங்கும் நானோ கார், உலகின் மிக சிக்கனமாக கார் என்றும், நிரூ பணமாக கண்டுபிடிப்பு என்றும் குறிப்பிட்டார்.

எங்களது பயணிகள் வாகனப் பிரிவின் முக்கிய பிராண்டுகள் சீரான வளர்ச்சி கண்டு வருகிறது என்றும், அனைத்து முக்கிய நகரங் களிலும் கிடைக்கிறது என்றும், காரின் தொழில் நுட்பங்கள் பவர் ஸ்டேரிங், ஹாட்ச் வசதிகள், புளூடூத் இணைப்பு வசதிகள் போன்றவை இந்திய சந்தைக்கு ஏற்ப உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

டாடா மோட்டார்ஸ் கடந்த இரண்டு வரு டங்களை ஜென்எக்ஸ் நானோ உருவாக்கத்துக்கு செலவிட்டுள் ளது. பழைய வாடிக்கையாளர்களி டமிருந்து கிடைத்த கருத்துகள் அடிப்படையில் மேம்படுத்தப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT