வணிகம்

சிறிய வங்கிகளுக்கு நடப்பாண்டில் உரிமம் வழங்கப்படும்

செய்திப்பிரிவு

இந்த ஆண்டுக்குள் சிறிய மற்றும் பேமெண்ட் வங்கிகளுக்கான உரிமம் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் முந்த்ரா தெரிவித்திருக்கிறார். உரிமம் வழங்குவது தொடர்பாக வேலைகள் நடந்து வருகின்றன. நடப்பு ஆண்டுக்குள் முடியும் என்று முந்த்ரா நம்பிக்கை தெரிவித்தார்.

சிறிய மற்றும் பேமெண்ட் வங்கி தொடங்க 74 நிறுவனங்கள் விண்ணப்பித்திருக்கின்றன. தவிர பொதுத்துறை காப்பீட்டு நிறுவன மான எல்ஐசி பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

ஒட்டு மொத்த வங்கித்துறையில் 9 சதவீத பங்குகளை எல்ஐசி நிறுவனம் வைத்திருக்கிறது. குறிப்பிட்ட நிறுவனம் இவ்வளவு பங்குகளை வைத்திருப்பது நிதி ஸ்திரத்தன்மையை பாதிக்கும். இதனால் உடனடியாகவோ அல்லது வருங்காலத்திலோ பாதிப்பு வரும் என்று சொல்ல முடியாவிட்டாலும், அதற்கான சாத்தியங்கள் உள்ளது என்று முந்திரா தெரிவித்தார்.

அரசுக்கு அடுத்து வங்கித் துறையில் அதிக பங்குகளை வைத்திருப்பது எல்ஐசிதான். வங்கித்துறையில் 9.21% பங்குகள் எல்ஐசிக்கு உள்ளன.

SCROLL FOR NEXT