வணிகம்

ஜிஎம்ஆர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 3 சீன நிறுவனங்கள் ஆலை அமைக்க முடிவு: ரூ. 21,700 கோடி முதலீடு

பிடிஐ

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஜிஎம்ஆர் இன்பிராஸ்ட் ரெக்சர் நிறுவனத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உற் பத்தி ஆலைகளை அமைக்க 3 சீன நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்நிறுவனங்கள் 350 கோடி டாலர் (ரூ. 21,700 கோடி) முதலீடு செய்யும் என தெரிகிறது.

குயிஸோகு சர்வதேச முத லீட்டு கழகம் (ஜிஐஐசி) என்ற கூட்ட மைப்பு இது தொடர்பாக ஜிஎம்ஆர் இன்பிராஸ்ட்ரெக்சர் நிறுவனத் துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஜிஐஐசி என்பது மூன்று சீன நிறுவனங்கள் அடங்கிய கூட்ட மைப்பாகும். இந்த நிறுவனங்கள் உயர் திறன் கொண்ட பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க உள்ளன.

இந்த ஆலை கள் ஜிஎம்ஆர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமையும் என்று மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய தகவலில் ஜிஎம்ஆர் இன்பிராஸ்ட்ரெக்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் மின் கருவிகள், எலெக்ட்ரானிக்ஸ், காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி கருவிகளை தயாரிப் பவையாகும்.

ஜிஐஐசி கூட்டமைப்பு 50 கோடி டாலரை இந்த சிறப்புப் பொரு ளாதார மண்டலத்தின் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்குச் செலவிடும்.

சர்வதேச தரத்திலான கட்ட மைப்பு வசதிகளை உருவாக்கி அதில் தொழில் தொடங்க வரும் இந்நிறுவனங்களுக்கு பல்வேறு வசதிகளும் அளிக்கப்படும். பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் மற்றும் ஆந்திர மாநில அரசு அளிக்கும் சலுகைகளும் இந்நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

இதன் மூலம் பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி பெறாத 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப் புக் கிடைக்கும் என்றும் ஜிஎம்ஆர் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT