தொழில்துறையினர் மற்றும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அரசாங்கத்தின் மீதான அதிகபட்ச எதிர்பார்ப்பினை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோடக் தெரிவித்திருக்கிறார்.
தொழில் புரிவதற்கான சூழலை உருவாக்குவது என்பதும் அதற்கான கொள்கைகளை உருவாக்குவதும் சரியானதாக இருந்தாலும் இதனை செயல் படுத்துதலில் கவனம் தேவை, அதில்தான் வெற்றி இருக்கிறது என்று கோடக் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது.
பங்குச்சந்தை மிகவும் செயல் துடிப்புடன் இருக்கிறது. ஒரு வருடத்துக்கு முன்பு இருந்த சூழ்நிலையை விட இப்போது நிலைமை மேம்பட்டிருந்தாலும், சந்தை அந்த எதிர்பார்ப்பினை தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இதற்கு காரணம் புதிய அரசாங் கத்திடம் இருக்கும் அதிகபட்ச எதிர்பார்ப்புதான்.
சில குறிப்பிட்ட பிரிவுகளை தவிர இந்திய பொருளாதாரம் சரியான திசையில் சென்று கொண் டிருக்கிறது. பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சீரான மெதுவான வளர்ச்சி யாகத்தான் இருக்கும். பங்குச் சந்தை இதற்கு ஏற்ப வர்த்தகமாக வேண்டும் என்று தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் மீது உதய் கோடக் நம்பிக்கை தெரிவித் தாலும், ஹெச்டிஎப்சியின் தீபக் பரேக், முந்தைய பிஜேபி அரசின் பங்குவிலக்கல் துறை அமைச்சர் அருண் ஷோரி ஆகியோர் மோடி அரசினை விமர்சனம் செய்திருக் கிறார்கள்.