ஆந்திர மாநிலத்தில் இந்தியா போஸ்ட் 95 தானியங்கி பணப்பட்டுவாடா மையங்களை (ஏடிஎம்) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதில் 36 ஏடிஎம்கள் புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திலும் மற்றவை ஆந்திர மாநிலத்திலும் நிறுவப்படும் என்று ஆந்திர மாநில வட்டார தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பி.வி. சுதாகர் தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் வங்கிகளுடன் ஒருங்கிணைப்பை (சிபிஎஸ்) பெற்றுள்ளன.
மாநிலத்தில் உள்ள 2,438 துணை தபால் அலுவலகங்களும் இதேபோல சிபிஎஸ் ஒருங் கிணைப்பை நடப்பு நிதி ஆண்டில் பெறும் என்று இந்தியா போஸ்ட் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.