டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் (டிவிஎஸ் எல்எஸ்எல்) நிறுவனம் டாடா குழும நிறுவனங்களில் ஒன்றை முழுவதுமாகக் கையகப்படுத்தியுள்ளது. ஆனால் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப் படவில்லை.
டாடா குழும நிறுவனங்களில் ஒன்றான டிரைவ் இந்தியா எண்டர்பிரைசஸ் சொல்யூஷன்ஸ் (டிஐஇஎஸ்எல்) நிறுவனத்தை டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் வாங்கி யுள்ளது.
இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ. 953 கோடியாகும். டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத் தின் மொத்த வருமானம் ரூ.4 ஆயிரம் கோடியாகும்.
ஆட்டோமோடிவ் தொடர்பான லாஜிஸ்டிக்ஸில் டிவிஎஸ் நிறுவனம் மிகவும் வலுவாக உள்ளது. அதேசமயம் குளிர் பானம், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், தொலைத் தொடர்பு, பாதுகாப்புத்துறை சார்ந்தசரக்குப் போக்குவரத்தில் டாடா குழும நிறுவனம் டிஐஇஎஸ்எல் உள்ளது.
டாடா குழும நிறுவனத்தை கையகப் படுத்தியதன் மூலம் டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவ னத்தின் செயல்பாட்டு வரம்பு மேலும் அதிகரிக்கும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். தினேஷ் தெரிவித்தார்.
இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 189 கிடங்குகள் உள்ளன. மொத்தம் 65 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட கிடங்கு வசதி இதன் வசம் உள்ளது.
கிழக்கு மாநிலங்கள் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இந்நிறுவனம் வலுவாக உள்ளது. தென்னிந்தியா மற்றும் வட மாநிலங்களில் டிவிஎஸ் லாஜிஸ் டிக்ஸ் வலுவாக உள்ளது. இந்நிறுவனத்துக்கு 30 லட்சம் சதுர அடி பரப்பிலான கிடங்கு வசதி உள்ளது. டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் கையகப்படுத்தும் 14-வது நிறுவனம் இதுவாகும்.
டாடா முதலீடு
டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் டாடா ஆபர் சூனிட்டிஸ் பண்ட் ரூ.250 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கணிசமான பங்குகள் டாடா நிறுவனம் வசம் செல்லும்.