வணிகம்

குவாண்டம் எட்ஜ் ஏசி: வீடியோகான் அறிமுகம்

செய்திப்பிரிவு

மின்னணு பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வீடியோகான் நிறுவனம் தற்போது குவாண்டம் எட்ஜ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஏசி-க்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஏசி-க்களில் டி3 கம்ப் ரெஸர்கள் உள்ளது சிறப்பம்சமாகும். இதனால் இவை 55 டிகிரி வெப்பநிலையைத் தாங்கி செயல்படும் என்று நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் அக்ஷய் தூத் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று புதிய ரக ஏசி-க்களை அறிமுகம் செய்து அவர் கூறியது:

இத்தகைய ஏசி-க்களில் ஐஃபீல் தொழில்நுட்பம் உள்ளது. இது தூங்கும்போது ஏற்படும் உடல் அசைவுகளுக்கேற்ப ஏசி-யின் அளவை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யும். மேலும் உங்களுக்குத் தேவையான குளிர் நிலையை முன்கூட்டியே நிர்ணயித்துக் கொள்ள ஐஃபேவர் எனும் வசதி உள்ளது. இதன் மூலம் ஏசியின் செயல்பாடுகளை தீர்மானித்துக் கொள்ள முடியும்.

அத்துடன் இதில் உள்ள ஐகிளீன் வசதி ஏசி-யை நீண்ட காலம் தூய்மையாக வைத்திருக்க உதவும். தமிழகத்தில் 12 சதவீத விற்பனைச் சந்தையைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT