சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட் டுள்ள ஆதித்ய பிர்லா குழுமம் பெங்களூரைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் ஜூபிளன்ட் சங்கிலித் தொடர் நிறுவனத்தைக் கையகப்படுத் தியுள்ளது. பெருந்தொகைக்கு வாங்கப்பட்டிருந்தாலும் அது பற்றிய விவரத்தை ஆதித்ய பிர்லா குழுமம் வெளியிடவில்லை.
கடந்த 15 தினங்களில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவ னங்கள் ஒன்றாக இணைவது இது மூன்றாவது நடவடிக்கையாகும்.
இதற்கு முன்பு ஆதித்ய பிர்லா குழுமம் தனது ஆயத்த ஆடை வர்த்தக நிறுவனமான ஆதித்ய பிர்லா ஃபேஷன் மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்களை ஒன்றிணைந்தது. இவற்றின் மொத்த விற்பனை வருமானம் ரூ. 5,290 கோடியாகும்.
பியூச்சர் குழுமமும் பார்தி ரீடெயல் நிறுவனங்களும் ஒன்றிணைந்தன. ரூ. 750 கோடி மதிப்பிலான ஒருங்கிணைப்பு மூலம் ரூ. 15 ஆயிரம் கோடி நிறுவனமாக ஒன்றிணைந்தன.
மும்பை பங்குச் சந்தைக்கு ஜூபிளன்ட் அனுப்பிய அறிக் கையில் பெங்களூருவில் உள்ள 4 பெரிய ஹைபர் மார்க் கெட்டுகளை ஆதித்ய பிர்லா குழுமம் வாங்கியதாக தெரிவித் துள்ளது.