பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மகாராஷ் டிர மாநிலம் சக்கன் பகுதியில் உள்ள ஆலையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் 17 சதவீத சந்தை யைப் பிடித்துள்ளது. இதை 23 சத வீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள் ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக விரிவாக்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சந்தைப் பிரிவு தலைவர் எரிக் வாஸ் தெரிவித்தார்.
தற்போது சக்கன் ஆலையில் மாதத்துக்கு 91 ஆயிரம் பல்சர் வாகனங்கள் தயாரிக்கப்படுகின் றன. இதை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்துக்கு மொத்தம் 3 ஆலைகள் உள்ளன. இவற்றின் மொத்த உற்பத்தி மாதத்துக்கு 3.25 லட்சம் வாகனங்களாகும். மாதத்துக்கு இந்நிறுவனம் 1.46 லட்சம் வாகனங்களை விற்பனை செய்கிறது.