பொதுத்துறை வங்கியான கார்ப் பரேஷன் வங்கி தன்னுடைய அடிப்படை வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. இப்போது வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 10 சதவீதமாக உள்ளது.
இதன் காரணமாக கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐ தொகை குறையும்.
இந்த வட்டி குறைப்பு வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாதத்தில் பல வங்கிகள் தங்களுடைய அடிப்படை வட்டி விகிதத்தை குறைத்தன.
பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி ஆகியவை 0.25 சதவீதம் குறைத்தது.