வணிகம்

‘வட்டி குறைப்பு கூட புதிய முதலீடுகளை உருவாக்காது’

செய்திப்பிரிவு

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால் கூட, உற்பத்தி துறை யில் புதிய முதலீடுகள் உரு வாகாது என்று பிக்கி அமைப்பு தெரி வித்துள்ளது.

தொழில்துறை அமைப்பான பிக்கி நடத்திய ஆய்வில் 69 சதவீத நிறுவனங்கள் வட்டி விகிதம் குறைந்தால் கூட நடுத்தர காலத் தில் புதிய முதலீடுகளை ஏதும் செய்ய திட்டமில்லை என்று தெரி வித்திருக்கிறது.

ரிசர்வ் வங்கி இந்த வருடத்தில் இதுவரை 0.50 சதவீத அளவுக்கு வட்டி குறைப்பு செய்திருக்கிறது. ஆனால் வங்கிகள் வட்டி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவில்லை.

உற்பத்தி நிறுவனங்கள் 9.5 சதவீதம் முதல் 14.75 சதவீதம் வரை வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். இந்த சர்வேயில் கலந்து கொண்ட 58 சதவீதம் நிறுவனங்கள் 12 சதவீத வட்டிக்கு மேல் கடன் வாங்கு கின்றன.

80 சதவீத நிறுவனங்கள் அடுத்த மூன்று மாதங்களில் கூடுதலாக எந்த பணியாளரையும் தேர்வு செய்யப் போவதில்லை என்று தெரிவித்திருக் கின்றன. தவிர, போதுமான நிலம், புதிய திட்டங்களுக்கான ஒப்புதல், குறைவான தேவை, அதிக வட்டி விகிதம் போன்ற காரணங்களால் விரிவாக்க பணிகளில் ஈடுபட முடிய வில்லை என்று நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்த சர்வேயில் 272 உற்பத்தி துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் சிறு மற்றும் குறு நிறுவனங்களில் இருந்து பெரிய உற்பத்தி நிறுவனங்கள் வரை கலந்து கொண்டன. கலந்து கொண்ட அனைத்து நிறுவனங் களின் வருமானம் ஆண்டுக்கு 4 லட்சம் கோடி ரூபாயை தாண்டும்.

SCROLL FOR NEXT