வணிகம்

500 முக்கியமான மருந்துகளின் விலையை உயர்த்த பார்மா நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

பிடிஐ

நீரிழிவு, மஞ்சள் காமாலை மற்றும் புற்று நோய்களுக்கான மருந்துகளின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தேசிய மருந்துகளின் விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் 2014-ம் ஆண்டு மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் மருந்து கட்டுப்பாட்டுச் சட்டம் 2013- படி விலை உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மத்திய வர்த்தக அமைச் சகத்தின் பொருளாதார ஆலோ சகர் இந்த விலை உயர்வை உறுதி செய்துள்ளார். இதன்படி ஆண்டு விலை உயர்வு 3.84 சதவீத அளவுக்கு இருக்கும் என்று என்பிபிஏ தெரிவித்துள்ளது.

இப்போது விலை உயர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 509 மருந்துகளின் விலையும் ஏற்கெனவே அதிக விலைதான். ஹெபடிடிஸ் பி மற்றும் சி-க்கான ஊசி மருந்தாக பரிந்துரைக்கப்படும் ஆல்பா இன்டர்பெரான் மருந்து மற்றும் புற்றுநோய்க்கான கார் போபிளாடின் ஊசி மருந்து, பூஞ்சை சார்ந்த நோய்களுக்கான புளுகான்ஸோல் மாத்திரைகளின் விலையும் உயர்கிறது.

ஆண்டுக்கு ஒரு முறைக்கு மேல் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்த வழி வகுக்காமல் விலை உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று இந்திய பார்மசூடிக்கல்ஸ் ஒருங்கிணைப்பு அமைப்பின் (ஐபிஏ) பொதுச் செயலர் டி.ஜி. ஷா தெரிவித்துள்ளார்.

விலை உயர்வுக்கு அனுமதிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் கருத்தடை சாதனங்களும் இடம்பெற்றுள்ளன.

அமாக்ஸிலின் மாத்திரை விலை ஏப்ரல் 1 முதல் அதிகரித்துள்ளது.

இப்போது முக்கியமான 348 மருந்துகளின் விலையின் உச்ச வரம்பை அரசு கட்டுப் படுத்தியுள்ளது. அரசின் நிர்ண யித்த மருந்துகளின் பட்டி யலில் உள்ளவை தவிர மற்ற வற்றின் விலையை ஆண்டுக்கு 10 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனு மதி அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT