கார் விற்பனை ஏப்ரல் மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. மாருதி, ஹுண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் விற்பனை குறைந்துள்ளது.
மாருதி
இந்தியாவில் அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்யும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை 11.4 சதவீதம் சரிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனம் 86,196 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 97,302 கார்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 12.6 சதவீதம் சரிந்ததில் மொத்தம் 79,119 கார்களே விற்பனையாகியிருந்தன. கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 90,523 கார்கள் விற்பனையாகியிருந்தது.
ஏற்றுமதி 4.4 சதவீதமாக இருந்ததில் மொத்தம் 7,077 கார்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகியிருந்தன. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 6,779 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.
ஹூண்டாய்
இந்நிறுவன கார் விற்பனை ஏப்ரல் மாதத்தில் 11.81 சதவீதம் சரிந்ததில் மொத்தம் 50,222 கார்களே விற்பனையா கியிருந்தன.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 56,953 கார்களை விற்பனை செய்தி ருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில் இந்நிறுவனம் 35,248 கார்களை விற்பனை செய்திருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 32,403 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
அந்த வகையில் விற்பனை 8.78 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் ஏற்றுமதி 39 சதவீதம் சரிந்து 14,974 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
இந்நிறுவன கார் விற்பனை 12 சதவீதம் சரிந்ததில் ஏப்ரல் விற்பனை 36,274 ஆகக் குறைந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 41,432 கார்களை விற்பனை செய்திருந்தது.
உள்நாட்டில் இந்நிறுவன கார் விற்பனை 34,107 ஆகும். முந்தைய ஆண்டு இது 39,902 ஆக இருந்தது. விற்பனை 15 சதவீதம் சரிந்துள்ளது.
நிறுவனத்தின் ஏற்றுமதி 42 சதவீதம் அதிகரித்து 2,167 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு ஏற்றுமதி 1,530 ஆக இருந்தது.
ஜெனரல் மோட்டார்ஸ்
ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவன கார் விற்பனை 35 சதவீதம் சரிந்தது. மொத்தம் 5,302 கார்களையே இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் 9,196 கார்களை விற்பனை செய்திருந்தது.
உற்பத்தி வரி குறைக் கப்பட்டதால் கார்களின் விலை குறைந்தபோதிலும் வாடிக் கையாளர்கள் கார்களை வாங்குவது குறைந்ததால் விற்பனை சரிந்ததாக நிறுவ னத்தின் துணைத் தலைவர் பி. பாலேந்திரன் தெரிவித்தார்.
சந்தையில் நிலவும் சூழ்நிலை யைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது தேக்க நிலை இன்னும் சிறிது காலம் தொடரும் என்றே தோன்றுவதாக அவர் குறிப்பிட்டார். புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று நிலைமை சீரடையும்வரை விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாக அவர் கூறினார்.