வணிகம்

தொழில் தொடங்க சாதகமான நாடுகள்: இந்தியாவுக்கு 119 இடம்

செய்திப்பிரிவு

தொழில் புரிய சாதகமாக உள்ள 130 நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 119 இடம் கிடைத்திருக்கிறது. பொருளாதார சூழல், ரிஸ்க், சப்ளை செயின் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பட்டியலில் நார்வே முதலிடத்தில் இருக்கிறது. நிறுவனங்களுக்கு ஏற்ற நாடாகவும், எந்த தடையும் இல்லை என்று 2015 எப்.எம். குளோபல் ரெஸ்லியன்ஸ் குறியீடு தெரிவிக்கிறது.

இந்த பட்டியலில் வெனிசுலா நாடு கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியா கடந்த வருடம் 112வது இடத்தில் இருந்தது. ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, லக்ஸம்பெர்க், ஜெர்மனி, கத்தார், கனடா, பின்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களை பிடித்திருக் கின்றன.

கடைசி பத்து நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இருக்கிறது. பாகிஸ்தான் 123வது இடத்தில் இருக்கிறது.

SCROLL FOR NEXT