இந்தியாவின் புதிய விமானப் போக்குவரத்து நிறுவனமான விஸ்தாரா விரிவாக்க பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு விமானத்தை இயக்கவும் திட்டமிட்டிருப்பதாக விஸ்தாரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரி வித்தார்.
தற்போதைய கடுமையான விதிமுறைகளில் மாற்றத்தை எதிர்பார்ப்பதால் விரிவாக்க பணிகளில் இருப்பதாக தெரிவித்தார்.
டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு நிறுவனம்தான் விஸ்தாரா ஆகும். விரைவில் அரபு நாடுகள், ஐரோப்பா அல்லது அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு போக்குவரத்தை தொடங்கும் திட்டத்தில் இருப்பதாக பீ டேக் யோ தெரிவித்தார்.
தற்போதைய 5/20 விதி (தற்போதைய விதிப்படி உள்நாட்டில் ஐந்து வருடங்கள் விமான போக்குவரத்தில் இருக்க வேண்டும் அல்லது 20 விமானங்கள் இயக்கினால்தான் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கும் அனுமதி கிடைக்கும்) இல்லையென்றால் இந்த தொழிலில் ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார்.
இந்தியர்களின் வெளிநாட்டுப் பயணம் 70 சதவீதம் மேற்கு நோக்கியே இருக்கிறது. அதனால் எங்களது கவனமும் மேற்கத்திய நாடுகளை நோக்கி இருக்கும் என்றார். 2019-ம் ஆண்டில் விமானங் களின் எண்ணிக்கையை 20-ஆக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக விஸ்தாரா ஏற்கெனவே தெரிவித் திருந்தது.