டெய்ம்லர் இந்தியா நிறுவனம் தனது பஸ் உற்பத்தியை அடுத்த மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
சொகுசான கார்களைத் தயாரிப்பதில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்கிறது பென்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஒரு அங்கம்தான் டெய்ம்லர். இந்தியாவில் இந்நிறுவனம் பஸ் தயாரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அதற்காக சென்னையை அடுத்த ஒரகடத்தில் ஆலையை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த ஆலை பணிகள் நிறைவடைந்து பஸ் உற்பத்தி அடுத்த மாதம் தொடங்குகிறது.
சென்னையில் அமைந்துள்ள இந்த ஆலையில் டெய்ம்லர் நிறுவனம் ரூ. 425 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த ஆலை ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆலையில் மெர்சிடெஸ் பென்ஸ் மற்றும் பாரத்பென்ஸ் பஸ்கள் தயாரிக்கப்படும்.
தொடக்கத்தில் இந்த ஆலை யில் ஆண்டுக்கு 1,500 பஸ்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஆண்டுக்கு 4 ஆயிரம் பஸ்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆலையில் பஸ்கள் தயாரிக்கப்படுவதோடு மெர் சிடெஸ் பென்ஸ் மற்றும் பாரத் பென்ஸ் பஸ்களை அசெம்பிளி செய்யவும் முடியும்.
டெய்ம்லர் நிறுவனத்துக்கு உலகெங்கிலும் உள்ள ஆலைகளில் இல்லாத பெருமை ஒரகடத்தில் உள்ள ஆலைக்கு கிடைத்துள்ளது. இந்த ஆலையில் மட்டும்தான் டிரக்குகள், பஸ்கள் மற்றும் இன்ஜின்கள் தயாரிப்புப் பிரிவுகள் ஒருங்கே அமைந்துள்ளன.
டெய்ம்லர் நிறுவன பஸ்கள் 9 அடி மற்றும் 16 அடி மற்றும் 16 அடிக்கு மேலான அளவுகளில் தயாரிக்கப்படும். முன்புற இன்ஜின் கொண்டவை மற்றும் பின்புற இன்ஜின் கொண்ட பஸ்கள் என இரண்டு பிரிவுகளில் இந்நிறுவனத் தயாரிப்புகள் அடுத்த மாதம் முதல் சாலைகளில் வலம் வரும்.
சர்வதேச அளவில் பஸ் மேல்பகுதி கட்டும் மெசர்ஸ் ரைட் பஸ் நிறுவனத்துடன் டெய் ம்லர் கூட்டு வைத்துள்ளது. இந்நிறு வனம் டெய்ம்லர் நிறுவனத்தின் முன்புற இன்ஜின் கொண்ட பஸ்களுக்கான மேற்பகுதியை கட்டித் தரும். இந்த ஆலை வளாகத்திற்குள்ளேயே பஸ் களின் மேற்பகுதி கட்டும் இடமும் உள்ளது.