வணிகம்

பிஹெச்இஎல் லாபம் 62% சரிவு

பிடிஐ

பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்தின் (பிஹெச்இஎல்) லாபம் கடந்த நிதி ஆண்டில் (2014-15) 62 சதவீதம் சரிந்துள்ளது. நிறுவனத்தின் லாபம் ரூ. 1,314 கோடியாகக் குறைந்துள்ளது.

முந்தைய நிதி ஆண்டில் (2013-14) நிறுவனத்தின் லாபம் ரூ. 3,461 கோடியாக இருந்தது. மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் இத்தகவலை பிஹெச்இஎல் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 30,806 கோடியாகும். இது முந்தைய ஆண்டு ரூ. 40,338 கோடியாக இருந்தது.

சமீபத்தில் இந்நிறுவனம் தெலங்கானாவில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மின் திட்டப் பணிகளை நிறைவேற்ற ஒப்பந்தம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT