வணிகம்

பூகம்பத்தை வைத்து வியாபாரம்: மன்னிப்பு கேட்டது லென்ஸ்கார்ட்

செய்திப்பிரிவு

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தை அடிப்படையாக வைத்து எஸ்.எம்.எஸ். அனுப்பிய இ-காமர்ஸ் இணையதளமான லென்ஸ்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

சனிக்கிழமை காலை நேபாளத் தில் பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 1.28 மணி அள வில் தங்களது வாடிக்கையாளர் களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி யது லென்ஸ்கார்ட். அதில் இந்த பூகம்பத்தை போல அதிரச்செய்யுங் கள்.

50 நபர்களுக்கு அழைப்பு அனுப் புவதன் மூலம் ரூ.3,000 மதிப்புள்ள குளிர் கண்ணாடியை ரூ.500க்கு பெற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவித்திருந்தது. ஆனால் பலி எண்ணிக்கை அதிகரித்து நாடெங் கும் சோகம் பரவியுள்ள நிலையில் மாலை மூன்று மணி அளவில் மன்னிப்பு கேட்டது.

‘இன்று எங்களுக்கு மோசமான நாளாகும். ஒரு பேரழிவை வியாபார நோக்கத்துடன் அணுகியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சம்பவத்துக்கு நிபந்தனை யற்ற மன்னிப்பு கோருகிறோம்.

வருங் காலத்தில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் இருப்பதற்கு தேவை யான நடவடிக்கையை எடுத்திருக்கி றோம்’ என்று லென்ஸ்கார்ட் நிறுவ னர்கள் தங்களுடைய அறிக்கை யில் தெரிவித்திருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT