1996 ம் ஆண்டு என்று நினைக்கிறேன். ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் ரிலீஸான நேரம். அண்ணனோட நண்பர் ஒருத்தர் வைத்திருந்த கார் அது. ‘பிடித்திருந்தால் வைத்துக்கொள்ளுங்கள். பணம் கிடைக்கும்போது கொடுங்க’ என்று ஒரு வெள்ளை நிற பியெட் காரைக் கொடுத்தார்.
இப்போது வரைக்கும் எத்தனையோ கார்களில் அமர்ந்து பயணித்து பார்த்துவிட்டேன். அந்தக் கார் கொடுத்த ஒரு சுகம் எதிலும் அனுபவித்ததில்லை. சின்ன கார், டபுள் சீட் மாடலில் வந்த கார் அது. எளிமையாக அதே நேரத்தில் இது நம்ம கார், இது நம்ம பயணம் என்று மனதை மிதமாக்கும் ஒரு உணர்வை ஏற்படுத்தும்.
அந்தக்காலத்தில் இதற்கு போட்டியாக பல கம்பெனிகள் புதிய கார்களை இறக்குமதி செய்தும் முன்னிலை வகித்த கார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
நான், முதன்முதலில் பயணித்தே கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது. இன்றைக்கும் பசுமை மாறாமல் நினைத்ததும் மனதில் விரியும் கார் அதுவாகத்தான் இருக்கிறது. இதுவே ஸ்பெஷல் இல்லையா?