வணிகம்

வெளியேறுகிறதா கேரிஃபோர்?

செய்திப்பிரிவு

பிரான்ஸை சேர்ந்த ரீடெய்ல் நிறுவனமான கேரிஃபோர், இந்தியா விலிருந்து தனது செயல்பாடுகளை விலகிக் கொள்ளப்போவதாக தெரிகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் 5 மொத்தவிலை கடைகளை அமைத்திருக்கிறது.

சமீபத்தில் இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் வெளியேறி இருக்கிறார்கள். சில பணியா ளர்கள், விடுப்பு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில வாரங்களாக சில பணியாளர்களை வெளியேற்றி விட்டதாகவும், இந்தியாவிலிருந்து வெளியேற திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

கடந்த மாதம், இந்தியாவில் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பாரதிய ஜனதா கட்சி, ஆட்சிக்கு வந்தால் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை தடை செய்வோம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT