ஆயுள் காப்பீட்டு நிறுவனமான மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது காப்பீட்டுத் திட்டங்களை விற்பனை செய்வதற்கு லெஷ்மி விலாஸ் வங்கியுடன் (எல்விபி) ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
இதன் மூலம் லெஷ்மி விலாஸ் வங்கியின் 400 கிளைகள் வழியாக மேக்ஸ் லைப் திட்டங்கள் விற்பனை செய்யப்படுமென அந்த நிறுவனங்கள் நேற்று கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக பேசிய மேக்ஸ் ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் சட் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு தரப்பு பலன்களும் வாடிக் கையாளர்களுக்கு கிடைக்கும்.
வாடிக்கையாளர்களுக்கான நீண்ட கால சேமிப்பு, பாதுகாப்பு, ஓய்வுகால திட்டங்கள் போன்ற வற்றில் கவனம் செலுத்து வோம். மேலும் இந்த ஒப்பந்தம் தென்னிந்தியாவில் எங்களது நிறுவன வளர்ச்சிக்கு உதவும் என்றார்.
லெஷ்மி விலாஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் ராகேஷ் ஷர்மா பேசியபோது இரண்டு நிறுவனங்களின் திறன்களையும் அடிப்படையாகக் கொண்டு வாடிக் கையாளர்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம்.
எங்களது சேவைகளைப் பயன்படுத்தும் என்ஆர்ஐ வாடிக்கையாளர் களிடமும் ஆயுள் காப்பீடு தீர்வுகளை கொண்டு செல்ல உள்ளோம் என்று குறிப்பிட்டார்.