பொதுத்துறை நிறுவனமான என்.எம்.டி.சி.யில் எல்ஐசி முதலீடு செய்திருக்கிறது. செப்டம்பர் 20 முதல் ஏப்ரல் 9 வரையிலான காலகட்டத்தில் எல்ஐசிமுதலீடு செய்திருக்கிறது. இந்த இடைப் பட்ட காலத்தில் 7.98 கோடி பங்குகளை வாங்கி இருக்கிறது. அதாவது நிறுவனத்தின் 2.13 சதவீத பங்குகளை கைப்பற்றி இருக்கிறது.
என்.எம்.டி.சி. நிறுவனத்தில் ஏற்கெனவே 8.11 சதவீத அளவுக்கு எல்ஐசி நிறுவனத்தின் முதலீடு இருக்கிறது. தற்போதைய முதலீட்டையும் சேர்க்கும் போது என்.எம்.டி.சி. நிறுவ னத்தில் 10.12 சதவீத பங்கு களை எல்ஐசிநிறுவனம் வைத்திருக்கிறது. தற்போதைய சந்தை மதிப்பில் எல்ஐசி முதலீடு செய்திருக்கும் பங்குகளின் மதிப்பு 5,440 கோடி ரூபாய்க்கு மேலே உள்ளது.
இதற்கிடையில், அரசாங்கம் இந்த நிறுவனத்தில் இருந்து 10 சதவீத பங்குகளை விலக்கி கொள்ளும் திட்டத்தில் இருக்கிறது. இதற்கு மத்திய அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துவிட்டது.