வணிகம்

காலாண்டு முடிவுகள்

பிடிஐ

ஹெச்டிஎப்சி லாபம் 8% உயர்வு

முன்னணி வீட்டுக்கடன் நிறுவனமான ஹெச்டிஎப்சியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 8% உயர்ந்து 1,862 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 1,723 கோடி ரூபாயாக இருந்தது.

வீட்டுக்கடன் வழங்குவது முக்கியமான தொழிலாக இருந்தாலும் மூன்று துணை நிறுவனங்களும் இருக்கின்றன. ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்ட் லைப் இன்ஷூரன்ஸ், ஹெச்டிஎப்சி ஜெனரல் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி ஏஎம்சி ஆகிய மூன்று நிறுவனங்கள் இருக்கின்றன.

மார்ச் காலாண்டில் 12.5 சதவீதம் அளவுக்கு வருமானத்தில் வளர்ச்சி இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 6,620 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 7,448 கோடி ரூபாயாக இருக்கிறது. இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 13 ரூபாய் வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார் லாபம் 74% உயர்வு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 74 சதவீதம் உயர்ந்து 90.52 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 52 கோடி ரூபாய் அளவுக்கு நிறுவனத்தின் நிகர லாபம் இருந்தது.

நிகர விற்பனை 13.8 சதவீதம் உயர்ந்து 2,456 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,159 கோடி ரூபாயாக நிகர விற்பனை இருந்தது. நான்காவது காலாண்டில் மோட்டார் சைக்கிள் விற்பனை 2.21 லட்சமாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1.97 லட்சம் வாகனங்கள் விற்பனையாயின.

இந்த காலாண்டில் 82971 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிகர விற்பனை 26.8 சதவீதம் அதிகரித்து ரூ.10,098 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ.7,965 கோடியாக விற்பனை இருந்தது.

ஆக்ஸிஸ் வங்கியின் லாபம் ரூ.2,180 கோடி

ஆக்ஸிஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 18.3 சதவீதம் உயர்ந்து ரூ.2,180 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.1,842 கோடியாக இருந்தது.

கடந்த வருடம் மார்ச் காலாண்டில் ரூ.10,178 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.12,384 கோடியாக இருக்கிறது. 2014-15 ம் நிதி ஆண்டுக்கு 260 சதவீதம் டிவிடெண்ட் வழங்கி இருக்கிறது.

2 ரூபாய் முகமதிப்புள்ள பங்கு என்பதால் ஒரு பங்குக்கு 4.60 ரூபாய் டிவிடெண்ட் கிடைக்கும். ஒட்டுமொத்த நிதி ஆண்டில் (2014-15) வங்கியின் நிகரலாபம் 18.3% உயர்ந்து ரூ.7,357 கோடியாக இருக்கிறது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் ரூ.6,217 கோடியாக இருந்தது.

2014-15ம் நிதி ஆண்டில் மொத்த வருமானம் ரூ.43,843 கோடியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT