மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கடன் சந்தையில் ரூ. 6 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்திருக்கின்றன. கடந்த 2014-15 நிதி ஆண்டில் இந்த தொகை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் முதலீடு செய்ததை விட 8 சதவீதம் அளவுக்கு கடன் சந்தை முதலீடு உயர்ந்திருக்கிறது.
இதற்கிடையில் பங்குச் சந்தை யில் 40,000 கோடி ரூபாய் அளவுக்கு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.
வரும் 2015-16 நிதி ஆண்டிலும் கடன் சந்தை மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் உயரும் என்று மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன.
இருந்தாலும் இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கமான ஆம்பி, விநியோகஸ்தர்களுக்கு ஒரு சதவீதத்துக்கு மேல் கமிஷன் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்திருப்பதால் விற்பனை பாதிக்கப்படலாம் என்ற கருத்தும் இருக்கிறது.
இதே காலத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 1.64 லட்சம் கோடி ரூபாய் கடன் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள்.