பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் இந்திய நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம் எக்ஸ்புளோரேஷன் (ஆல்பா) நிறுவனம் விமான எரிபொருள் விற்பனை செய்வதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் பெட்ரோலியம் பிஎல்சி நிறுவனத்தின் இந்தியப் பிரிவான இந்நிறுவனம், இந்தியா வில் 47 கோடி டாலர் முதலீடு செய்திருப்பதாகவும் இந்தியாவில் விமான எரிபொருள் விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறும் கோரியிருந்தது.
இது குறித்து அமைச்சகம் அனுப்பிய பதிலில் 47 கோடி டாலர் முதலீடு செய்தற்காக விமான எரிபொருள் விற்பனை அனுமதி அளிக்க முடியாது என குறிப்பிட்டதாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் (ஏடிஎப்) விற்பனை செய்வதற்கு நிறுவனங்களுக்கு சில அடிப் படைத் தகுதிகள் வரையறுக் கப்பட்டுள்ளன. இதன்படி எண்ணெய் அகழ்வுப் பணியில் ரூ.2,000 கோடி முதலீடு செய் திருக்க வேண்டும். சுத்திகரிப்பு, குழாய்ப்பாதை, எண்ணெய் நிரப்பு நிலையம் உள்ளிட்ட பணி களிலாவது இத்தகைய முதலீடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய முதலீடுகள் செய் துள்ள நிறுவனங்களுக்குத்தான் விற்பனை அனுமதி அளிக்கப்படும் என்று மக்களவையில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் பிரதான் தெரிவித்தார்.
2012, 2013 ஆகிய நிதி ஆண்டு களில் இந்நிறுவனம் எண்ணெய் அகழ்வுப் பணிக்காக செய்த மொத்த முதலீடு 50 கோடி டாலர்.
எரிபொருள் விற்பனை அங்கீகாரத்துக்கு நிர்ணயிக் கப்பட்ட அளவை இந்நிறுவனம் எட்டவில்லை. இதனால் இந்நிறுவ னத்துக்கு அனுமதி மறுக்கப் பட்டதாக அவர் கூறினார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 21 எண்ணெய் வயல்களில் அகழ்வுப் பணிக்கு செலவிடும் தொகையில் 30 சதவீத பங்குகளை பிரிட்டிஷ் பெட்ரோலியம் வாங்கியுள்ளது. ஆனால் இத்தொகை முதலீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.
பேச்சுவார்த்தை
தென் கொரியாவின் மிகப் பெரிய உருக்கு நிறுவனமான போஸ்கோவுடன் மத்திய அரசின் உருக்கு ஆணையமும் (செயில்) இணைந்து ஒருங்கிணைந்த உருக்கு ஆலை அமைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவ தாக மத்திய உருக்கு மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆண் டுக்கு 30 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யும் நிறுவனத்தைத் தொடங்க பேச்சு நடத்தி வருவதாக அவர் கூறினார்.
ஏற்கெனவே பொகாரோவில் இதுபோன்ற உருக்கு ஆலை அமைப்பது தொடர்பாக இருதரப் பினரிடமும் நடத்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.
மசோதா அறிமுகம்
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு உயர்த்தப்படுவதற்கான மசோதாவை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா அறிமுகம் செய்தார்
குறு நிறுவனங்களுக்கான இடம், இயந்திரங்கள் ஆகிய வற்றுக்கான முதலீட்டு அளவு ரூ. 50 லட்சமாக உயர்த்தப்படும். சிறிய ரக நிறுவனங்களுக்கான முதலீட்டு அளவு ரூ. 10 கோடியாக உயர்த்தப்படும். இதேபோல நடுத்தர ரக நிறுவனங்களுக்கான முதலீட்டு அளவு ரூ. 30 கோடியாக உயர்த் தப்படும்.
டைட்டானியம் ஆலை
விண்வெளி ஆராய்ச்சித் துறை, கேரள மாநில உலோகம் மற்றும் கனிம வள நிறுவனத்துடன் சேர்ந்து டைட்டானியம் ஸ்பாஞ்ச் ஆலை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக மக்கள வையில் உருக்கு மற்றும் சுரங்கத்துறை இணையமைச்சர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்தார்.