வணிகம்

வாராக்கடனில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா முதலிடம்

செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா முதலிடத்தில் உள்ளது. வங்கி கொடுத்த கடனில் வாராக்கடன் மற்றும் கடனை மறுசீரமைப்பு செய்தது ஆகிய வற்றை சேர்க்கும்போது இந்த வங்கி முதலிடத்தில் இருக்கிறது.

இந்த வங்கி கொடுத்த கடனில் 21.5 சதவீத கடன்கள் (சொத்து) பிரச்சினையில் இருக்கிறது. இதற்கடுத்து யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் சொத்துகளில் 19.04 சதவீதம் பிரச்சினையில் இருக்கிறது. பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் 18.25 சதவீத சொத்துகளும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் 17.85 சதவீத சொத்துகளும் பிரச்சினையில் இருக்கிறது. இவை டிசம்பர் 31 நிலவரப்படி.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, அலகாபாத் வங்கி மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை கொடுத்த கடன்களில்15 சதவீதத்துக்கு மேல் பிரச்சினையாக (வாராக்கடன் மற்றும் கடனை மறுசீரமைப்பு செய்யப்பட்டதையும் சேர்த்து) உள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வருவது ரிசர்வ் வங்கிக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் பெரிய பிரச்சினை தருவதாக உள்ளது.

கடனை மறுசீரமைப்பு செய் தவை பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகும். கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியலில் இருக்கும் முதல் 30 நபர்கள் செலுத்த வேண்டிய தொகை மட்டும் 95,122 கோடி ரூபாய் ஆகும்.

பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடனில் இது மூன்றில் ஒரு பங்காகும். பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் டிசம்பர் 31, 2014 நிலவரப்படி 2,60,531 கோடி ரூபாயாகும்.

SCROLL FOR NEXT