வணிகம்

நடப்பு கணக்கு பற்றாக்குறை 0.9% எஸ்பிஐ கணிப்பு

செய்திப்பிரிவு

கடந்த நிதி ஆண்டில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 0.9 சதவீதமாக இருக்கும் என எஸ்பிஐ கணித்திருக்கிறது. 2014-15 நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2,400 கோடி டாலராக (ஜிடிபியில் 0.9%) இருக்கும் என்று எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டிலும் (2015-16) நடப்பு கணக்கு பற்றாக்குறை 1 சதவீதம் அளவிலே இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது.

2012-13-ம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.8 சதவீதமாகவும், 2013-14-ம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.7 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி இலக்கை நம்மால் எட்ட முடியவில்லை. ஆனால் இப்போது வெளிநாட்டு வர்த்தக கொள்கை வெளியாக இருப்பதால் ஏற்றுமதி இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை உருவாகி இருக்கிறது.

கடந்த 1-ம் தேதி இந்த கொள்கை வெளியானது. 2019-20ம் ஆண்டில் 90,000 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருகிறது.

SCROLL FOR NEXT