முன்னணி டாக்ஸி நிறுவனமான ஓலா புதிய முதலீட்டை திரட்ட திட்டமிட்டு வருகிறது. இதற்காக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுடன் பேசி வருகிறது. சுமார் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த முதலீடு திரட்டுவதற்கு கால தாமதம் ஆனாலும், முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள. ஆனால் பல்வேறு விஷயங்களையும் ஆய்வு செய்ய வேண்டிய நிலைமை யில் இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் முதலீடு செய்வது உறுதி என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
டிரைவர்களின் எண்ணிக் கையை எப்படி அதிகப் படுத்துவது, அவர்களை எப்படி தக்க வைத்துகொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள நினைக்கிறார்கள். டிரைவர்களுக்கு கமிஷன் கொடுப்பது நிறுவன இருப்பில் மிகப்பெரிய சுமையாக இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் உணவு சப்ளை செய்யும் சேவைத்துறை சார்ந்த விரிவாக்கம் எந்த அளவுக்கு லாபகரமாக இருக்கும் என்பது குறித்தும் முதலீட்டாளர்கள் தெளிவடைய விரும்புகின்றனர் என்று கூறினார்.
இது குறித்து ஓலா செய்தி எதையும் தெரிவிக்கவில்லை.