ஆட்டோமொபைல் துறைக்கான பேட்டரிகள் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் அமரராஜா பேட்டரீஸ் நிறுவனம் தனது புதிய ஆலையை ஆந்திர மாநிலத்தில் திறந்துள்ளது. இந்த ஆலையில் கார்களுக்கான பேட்டரி தயாரிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 22 லட்சம் பேட்டரிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.
சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் மண்டலியில் இந்த ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை கடந்த மார்ச் 26-ல் உற்பத்தியைத் தொடங்கியதாக மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஆலை செயல்படத் தொடங்கியுள்ளதால் நான்கு சக்கர வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி ஆண்டுக்கு 82 லட்சமாக உயரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.