ஆக்ஸிஸ் வங்கி டெபாசிட் டுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. பல கால இடைவெளிகளில் இருக்கும் டெபாசிட்களுக்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை குறைத்த பிறகு, டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் முதல் வங்கி ஆக்ஸிஸ் வங்கிதான்.
18 முதல் 36 மாதங்களுக்கான டெபாசிட் திட்டங்களுக்கு 0.25 சதவீதம் வரை வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 18 மாதங் களுக்குள்ளான டெபாசிட்களுக்கு 0.15 சதவீதம் வரை வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
இவை ஒரு கோடி ரூபாய்க்கு உள்ளாக இருக்கும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமாகும். டெபாசிட் டுக்கு வட்டியை குறைத்தால், கடனுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏற்கெனவே ஹெச்டிஎப்சி வங்கியும் டெபாசிட் களுக்கான வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ளது.