வணிகம்

இந்தியர்கள் தங்கத்துக்கு அடிமை: அமெரிக்க கோடீஸ்வரர் கருத்து

செய்திப்பிரிவு

இந்தியர்களை தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமில்லாதது. அந்த அளவுக்கு இந்தியர்களிடம் தங்கம் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கர்களை எப்படி மது அருந்த வேண்டாம் என்று கூறுவது சாத்தியமில்லாததோ அதைப் போலவே இந்தியர்களை தங்கம் வாங்காதீர்கள் என்று கூறுவதும் பலனளிக்காது என்று அமெரிக்க கோடீஸ்வரர் தாமஸ் கப்ளான் தெரிவித்தார்.

சரித்திர ரீதியாக பார்த்தோ மேயானால், இந்தியர்களிடையே தங்கத்துக்கான ஒட்டுதல் மிக அதிகம். சொத்துகளை பெருக்குவதில் தங்கத்துக்கு மிக முக்கிய பங்கு இருந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், சீனா தற்போது தனது நாட்டு மக்களை தங்கம் வாங்குமாறு வலியுறுத்திவருவதை சுட்டிக் காட்டினார். இந்தியாவுக்கு ஆண்டு தோறும் 800 டன் முதல் 1,000 டன் வரை தங்கம் தேவைப்படுகிறது.

இத்தகைய சூழலில் இந்தியாவில் தங்க விற்பனையை தடை செய்வது என்பது அமெரிக்காவில் மது விற்பனையை தடை செய்வதைப் போன்றதாகும். இதற்கு தடை விதித்தாலும் அதை வேறு விதமாக மக்கள் வாங்கத்தான் செய்வார்கள் என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இக்கருத்தை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT