அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நிதி சார்ந்த பத்திரிகையான பாரான்ஸ் பத்திரிக்கை உலகின் 30 சிறந்த தலைமைச் செயல் அதிகாரிகளை பட்டியலிட்டுள்ளது. இதில் ஹெச்டிஎப்சி வங்கியின் சி.இ.ஓ. ஆதித்யா பூரியும் இடம் பிடித்திருக்கிறார்.
இந்த பட்டியல் 11 வருடமாக வெளியாகிறது. ஆரம்பத்தில் இருந்தவர்களில் வாரன் பபெட் இந்த பட்டியலில் இன்னும் தொடர்கிறார். இந்த வருடம் பட்டியலில் புதிதாக ஏழு நபர்கள் இணைந்திருக்கிறார்கள். அதில் ஹெச்.டி.எப்.சி. வங்கியின் சி.இ.ஓ. ஆதித்யா பூரியும் ஒருவர்.
மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் (ஆப்பிள்) இப்போது உயிருடன் இருந்திருந்தால் இந்த பட்டியலில் அவரும் இடம் பிடித்திருப்பார் என பாரான்ஸ் தெரிவித்திருக்கிறது. ஆரம்ப கால பட்டியலில் அவர் இருந்தார். 2011-ம் ஆண்டு அவர் இறக்கும் வரையிலும் இந்த பட்டியலில் இருந்தார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய சி.இ.ஓவான டிம் குக் இப்போது இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
30 சி.இ.ஓகளில் 20 நபர்கள் அமெரிக்காவையும், ஐவர் ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள்.