வங்கிகளில் நடந்த முறைகேடு காரணமாக கடந்த நான்கு வருடங் களில் 12,620 கோடி ரூபாய் அள வுக்கு பொதுத்துறை வங்கி களுக்கு இழப்பு ஏற்பட்டிருக் கின்றன. நிதி அமைச்சகத்தின் மூலம் இந்த தகவல்கள் திரட்டப்பட்டன. 25 பொதுத்துறை வங்கிகள் இந்த இழப்பினை சந்தித்திருக்கின்றன.
இதில் கர்நாடகாவை தலைமை யாக கொண்டு செயல்படும் ஐந்து பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, சிண்டிகேட் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் ஆகிய வங்கிகள் மட்டும் 2,060 கோடி ரூபாயை இழந்திருக்கின்றன. இந்த காலகட்டத்தில் 4,845 வங்கி முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இதில் பெரும்பாலான வழக்குகளில் வங்கி ஊழியர்களின் பங்கு இருந்திருக்கிறது. முறை கேடுகளுக்கு உடந்தையாகவோ அல்லது அதனை கண்டுகொள் ளாமலோ வங்கி ஊழியர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் அகமதாபாத்தை சேர்ந்த டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவர்கள் மீது எஸ்பிஐ, விஜயா வங்கி மற்றும் கனரா வங்கி புகார் கொடுத்தது.
ஒரு டெலிகாம் நிறுவனத்தின் நிறுவனர் மூன்று வங்கியில் இருந்து 40.4 கோடி ரூபாயை முறை யான ஆவணங்கள் இல்லாமல் கடன் வாங்கி இருக்கிறார் அதன் பிறகு கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு தலைமறைவாகிவிட்டார். இதுவரை கடனை திருப்பி செலுத்தவில்லை என்று சிபிஐ அறிக்கை தெரிவிக்கிறது. இதுவரை கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணமும் போலியானது என்று சிபிஐ தெரிவித்தது. ஏற் கெனவே 86 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டிருப்பதால் மொத் தம் 126.4 கோடி ரூபாய் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.