வணிகம்

இந்திய தயாரிப்பு: வெளிநாட்டு தோற்றம்- நடிகர் அருண் விஜய்

செய்திப்பிரிவு

ஒரு இந்திய நிறுவனத்தின் ஜீப்பை வாங்கி அதை வெளிநாட்டில் உபயோகப்படுத்தும் டிரக் பாணியில் மாற்றி வைத்திருக்கிறேன். அதற்காக நிறைய மெனக்கெட்டு இருக்கிறேன் என்று சொல்லலாம். நீங்கள் பார்த்தால் அது ஒரு வெளிநாட்டு டிரக் மாதிரி இருக்கும்.

ஜாகுவார், ஆடி கார் ஒட்டினாலும், வித்தியாசமான இந்த டிரக்கை ஒட்டும் போது கிடைக்கும் அனுபவமே தனி தான். உடற்பயிற்சி கூடத்திற்கு, விளையாடப் போகும் போது எல்லாம் அந்த டிரக்கைத் தான் எடுத்துட்டு போவேன். எனக்கு ஜீப் எப்போதுமே ரொம்ப பிடிக்கும்.

'வால்டர் வெற்றிவேல்' படத்தில் வரும் சிவப்பு நிற ஜீப் நான் உபயோகப்படுத்திக் கொண்டிருந்ததுதான். நான் வைத்திருக்கும் டிரக்கை சென்னையில் ஒட்டும் போது நிறைய பேர் என்ன வண்டி இது என்றும் நீளமாக இருக்கிறதே கஷ்டமாக இல்லையா என்றும் கேட்பார்கள்.

மனதுக்கு பிடித்த நெருக்கமான வண்டியை ஒட்டுவதில் என்ன கஷ்டம் இருக்கிறது. குடும்பத்துடன் அந்த டிரக்கில் ஒரு நீண்ட தூரப் பயணம் போகும் போது கிடைக்கும் அனுபவமே தனிதான்.

SCROLL FOR NEXT