வணிகம்

சென்செக்ஸ் 517 புள்ளிகள் ஏற்றம்

செய்திப்பிரிவு

இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று 2 சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டன. முக்கிய புளூசிப் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமானது. சர்வதேச சந்தைகளில் ஏற்றமான போக்கு நிலவியதால் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் இது எதிரொலித்தது.

மும்பை பங்குச் சந்தையான சென்சென்ஸ் குறியீடு 517 புள்ளிகள் ஏற்றம் கண்டு 27975 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 150 புள்ளிகள் உயர்ந்து 8492 புள்ளிகளில் முடிந்தது.

ஐடியா செல்லுலர் பங்குகள் 6 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. அல்ட்ராடெக் சிமெண்ட், ஆசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎப்சி, பார்தி ஏர்டெல் பங்குகள் சுமார் 3 சதவீதத்துக்கும் அதிகமாக வர்த்தகம் கண்டன. டெக் மஹிந்திரா, ஹிண்டால்கோ, கெய்ர்ன் இந்தியா, டாடா பவர், ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

நேற்றைய ஏற்றத்தின் மூலம் தேசியப் பங்குச் சந்தையில் கடந்த எட்டு நாட்களாக நிலவிவந்த இறக்கமான சந்தை சூழ்நிலை முடிவுக்கு வந்துள்ளது.

SCROLL FOR NEXT