வணிகம்

பங்குச் சந்தை 427 புள்ளிகள் வீழ்ச்சி

செய்திப்பிரிவு

நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்து முடிந்தன. சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிந்து 28503 புள்ளியில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 443 புள்ளிகள் வரை சரிந்தது.

இதே போல நிப்டி 128 புள்ளிகள் சரிந்து 8647 புள்ளியில் முடிவடைந்தது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 1.4 சதவீதம் வரை சரிந்து முடிந்தன. காப்பீடு மசோதா வியாழன் அன்று மாநிலங்களவையில் நிறைவேறியதால் ஏற்றத்துடன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது. ஆனால் அதன் பிறகு சந்தை சரிந்து முடிந்தது.

பணவீக்கம் எதிர்பார்ப்பை விட அதிகமாக வந்திருப்பதால் பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன. அதனால் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் கடன் மற்றும் நிதிக்கொள்கை அறிவிப்பில் வட்டி குறைப்பு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வட்டி குறைப்பு ஜூன் மாதம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன.

SCROLL FOR NEXT